März 31, 2025

ஆமி போல தமிழர் கட்சிகளும் வீடு கட்டவேண்டும்

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு வலி.மேற்கு பிரதேச சபையில் இன்று {21} வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்  நினைவேந்தல் இடம்பெற்றது.

தவிசாளர் த.நடனேந்திரனின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் இடம்பெற்றது.

அரசியலுக்காகவும் ஊடகங்களில் பிரச்சாரப்படுத்துவதற்காகவுமே இவ்வாறான நினைவேந்தல்கள் இடம்பெறுவதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

படையினர் வீடுகளைக் கட்டிக் கொடுக்கிறார்கள். அதேபோன்று நினைவேந்தல் செய்யும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வரவேண்டும் எனவும் மேற்படி கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக ஏனைய உறுப்பினர்கள் காரசாரமாக கருத்துரைத்தனர்.