கிளிநொச்சியும் முடங்கலாம்?
யாழில் கொரோனா தொற்று ; வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது ஆனால் பொதுமக்கள் அலட்சியமாக செயற்படுவதை காண முடிவதாக யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் தற்போது பாரிய இடப்பற்றாக்குறை காணப்படுகிறது இடை நிலை ; பராமரிப்பு நிலையங்களை ஆரம்பித்தோம். அவை கூட தற்போது நிரம்பும் நிலை காணப்படுகிறதென மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
அNதுவேளை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 69 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 137 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை (மே 19) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் 840 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 137 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனிடையே முல்லைதீவு புதுக்குடியிருப்பினை தொடர்ந்து கிளிநொச்சியிலுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே முல்லைதீவு மாவட்டம் முடக்கப்பட்ட நிலையில் அடுத்து கிளிநொச்சியையும் முடக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனிடையே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 400 இற்கும் அதிகமானவர்கள், கொரோனா பரிசோதனைகளிற்கு ஒத்துழைக்காமல் தலைமறைவாகியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை காவல்துறை பிரிவுகள் கடந்த 17ம்; திகதி இரவு 11.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று வியாழக்கிழமை இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும் மக்கள் தனிமைப்படுத்தல் விதியினை சரியாக நடைமுறைப்படுத்த தவறிவருவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.