ஏற்றிச்செல்ல பேரூந்து இல்லையாம்?
முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா இனம் காணப்பட்ட ஆறுபேர் 7 மணி நேரம் வீதியில் காவல் நின்றபோதும் ஏற்றிச் செல்ல வாகனம் இன்மை காரணமாக திருப்பியனுப்பியதாக அப் பகுதி மக்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இருட்டுமடுக் கிராமத்தைச் சேர்ந்த ஆறுபேருக்கு நேற்று முன்தினம. கொரோனா உறுதி செய்த நிலையில் நேற்றைய தினம் வைத்தியசாலைக்கு ஏற்றும் பணி இடம்பெற்றது .
இவ்வாறு ஏற்றிய சமயம் இருட்டுமடுவைச் சேர்ந்த ஆறுபேரையும் ஒரே இடத்தில் நிற்குமாறு அடையாளப்படுத்திய ஓர் இடத்தை கூறியதற்கு அமைய பகல் 12 மணியில் இருந்து 6 மணிவரை காத்திருந்தபோதும் நாளைய தினம் ஏற்றுவதாக திருப்பி அனுப்பியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டு கேட்டபோது,
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்கு கீழ் தற்போது நான்கு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களே பணியாற்றுகின்றனர். அதேநேரம் ஒரே நாளில் 321 பேருக்கு கொரோனா தொற்று ஏற்றுவதற்கு வழங்கப்பட்ட பேரூந்து பெரிய அளவினையுடையது. அந்த பேரூந்து சிறு வீதிகளில் பயணிக்க முடியவில்லை. இதேநேரம் இருட்டுமடுவின் வீதி மோசமாக சேதமும் அடைந்துள்ளது. இந்தனைக்கும் மத்தியிலேயே பெருமளவு நோயாளர்கள் ஒரே நாளில் ஏற்றப்பட்டுள்ளது.
இதேநேரம் மிகுதியானோர் புதன் கிழமை ( இன்று) ஏற்றுவதற்கு பேரூந்துடன் பிக்கப் வாகனமும் வருவதனால் மிகுதி அனைவரும் ஏற்றிச் செல்லப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது..