லண்டனுக்கு பிளைட் பிடிச்சு போய் கதை சொன்ன இயக்குனர்.. கண்டுக்காமல் விட்ட தனுஷ்
சமீபகாலமாக தனுஷை வைத்து படம் இயக்க பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். அவரது படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாலும் அவரது படங்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைப்பதாலும் இளம் இயக்குனர்கள் தனுசை குறி வைத்துள்ளனர்.
தனுஷும் மாஸ் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஓரம் கட்டிவிட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கி விட்டார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான அசுரன், கர்ணன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அடுத்ததாக தனுஷ் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன. அந்த படங்களில் பணியாற்றும் ஒவ்வொரு இயக்குனர்களும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இயக்குனர்கள். அதில் மீண்டும் தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் வெளிவர உள்ளது.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் ஒரு சில குறிப்பிட்ட தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார். அந்தவகையில் கலைப்புலி எஸ் தாணு மற்றும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் செல்லப் பிள்ளையாகவும் வலம் வருகிறார். இதனை புரிந்து கொண்ட சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த கார்த்திக் தங்கவேலுக்கு ஃபிளைட் டிக்கெட் போட்டு லண்டனுக்கு அனுப்பி தனுஷுக்கு கதை சொல்ல வைத்தனர்.
அப்போது தனுஷ் ஜகமே தந்திரம் படப்பிடிப்பில் இருந்தாராம். இவ்வளவு ரிஸ்க் எடுத்து கதைசொல்லியும் தற்போது வரை அந்த இயக்குனருக்கு எந்த ஒரு ரெஸ்பான்ஸும் செய்யாமல் இருப்பதால் அந்த இயக்குனர் தற்போது வழியில்லாமல் விஷாலை வைத்து ஒரு படம் இயக்க சென்றுவிட்டார். இருந்தாலும் தனுஷ் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறாராம்.