November 22, 2024

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள்.

மே 18 என்பது இறந்த புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நாள் அல்ல இந்த போரால் பலிவாங்கப்பட்ட உயிர்களை நினைவு கூறும் நாள்.
புலியை எதிருங்கள் ஆதரியுங்கள் அது உங்கள் உங்கள் தனிப்பட்ட மனவெழுச்சியாகும்.
ரஜனி/கமல் , விஜய்/அஜித் போன்று திரையில் பார்த்து பங்கு பிரித்து பார்த்து விசிலடிப்பது அல்ல எம் நிலமை.
உங்களைப் போல அல்ல எங்களுக்கு.
இன்றைய நாளில் செத்த எல்லாரையும் நாங்கள் உயிரோடு கண் முன் கண்டவர்கள் ஏன் அவர்கள் செத்தார்கள் என்ற காரணம் தெரிந்தவர்கள்.
இன்றைய நாளில் புலி எதிர்ப்பு என்று நீங்கள் கேவலப்படுத்துவது புலிகளையல்ல உங்களோடு சகோதரமாக பழகும் ஒருவனது அண்ணனை/ தம்பியை /அக்காவை/ தங்கையை / சொந்தக்காரனை.
ஒவ்வொரு மனுசனிட்டை போயும் உனக்கு உயிர் குடுத்தது யார் எண்டால் அம்மா அப்பா என்றிட்டு போய்விடுவான் ஆனால் எங்களுக்கு உயிர் குடுத்ததோட அம்மா அப்பான்ர வேலை முடிஞ்சுது இண்டைக்கு நாங்கள் உயிரோட இருக்கிறதுக்கு காரணம் அவங்கள் குடுத்த உயிர் தான்.
எங்கோ ஒரு அரங்கில் இருந்து கொண்டு ஊடகங்களால் மட்டும் எங்களை பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு எம் நிலமை தெரிய வாய்ப்பில்லை தான் அதனால் உங்கள் மேல் எனக்கு கோபமும் இல்லை ஆனால் இந்தப்படத்துக்கு எனக்கு பதில் சொல்லுங்கள் இதில் இருப்பது மீசை அரும்ப முதலே என்னோடு கை கோர்த்து பள்ளி வந்தவனும் ஒன்றாய் படித்தவனும் ஒன்றாய் விளையாடியவனும் ஒன்றாய் தின்று ஒன்றாய் படுத்தவனுமே எனக்கு தெளிவாய் தெரியும் இதில் ஒருத்தனும் முஸ்லீமைக் கொல்ல ஆயுதம் தூக்கவில்லை ஏன் சிங்களவரைக் கூட கொல்ல வேண்டும் என்று ஆயுதம் தூக்கவில்லை. நான் தூக்காவிடில் தன் அக்காவையோ தங்கையையோ குலைத்துவிடுவார்கள் என்று தூக்கியவர்கள்.
யாராவது தன் அழிவுக்கருவியை தானே விரும்பித் தூக்குவானா? அது தெரிந்தும் ஏன் தூக்கினான் என்று ஒரு நிமிடமாவது யாராவது நினைத்துப் பார்த்தால் இந்த உணர்வு இடைவெளிகள் வராது.
இவர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்குத் தான் புலிகள் எனக்கு என் நிழலோடு வாழ்ந்த சகோதரர்கள், கண்ணால் கண்ட கடவுள்கள் ஏன் அதற்கு மேலே என்று தான் சொல்வேன்….
என் பள்ளியில் ஒரே வகுப்பில் இருந்து மட்டும் 14 பேர் வீரச்சாவடைந்தார்கள் அத்தனை பேரும் போராடப் போனது ஏன் என்பது எனக்கு தெளிவாகத் தெரியும்.
No photo description available.