பிரான்ஸில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!
பிரான்ஸ் நாளை புதன்கிழமை, தன்னை அடுத்த கட்ட பெரிய உள்ளிருப்பு வெளியேற்றப் பாய்ச்சலிற்குத் தயாராகும் நிலையில், தொற்றுக்களும் சாவுகளும் அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணிநேரத்திற்குள் 17.210 பேரிற்குக் கொரோனத் தொற்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதனுடன் பிரான்சில் கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5.898.347 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் 228 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 108.040 ஆக அதிகரித்துள்ளது.
வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 81.692 (+187) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.348 (+41) பேர் சாவடைந்துள்ளனர். 22.749 பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.015 ஆக உள்ளது. இதில் இல்-து-பிரான்சில் மட்டுமே 1.237 பேர் தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.