November 22, 2024

கொரோனா ஒருபுறம்:காலநிலையும் வாட்டுகின்றது!

இலங்கையை ஒருபுறம் கொரோனா வாட்டிவதைக்க இன்னொருபுறம் காலநிலை வாட்டி வதைக்க தொடங்கியுள்ளது.

இலங்கையில் தற்போதும் நிலவும் சீரற்ற வானிலையால், 11,796 குடும்பங்களைச் சேர்ந்த 16,730 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

ஒன்பது மாவட்டங்களிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கண்டி, மாத்தளை, காலி, புத்தளம், குருநாகல், கம்பஹா, களுத்துறை, கொழும்பு மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே பாதிக்கப்பட்டுள்ளன.

காலியில் இருவரும் கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருமென நால்வர் மரணமடைந்துள்ளனர். கண்டி மாவட்டத்தில் இருவரும் காலியில் ஒருவருமென மூவர் காணாமல் போயுள்ளனர்.

சீரற்ற வானிலையால், மேலே குறிப்பிட்ட ஒன்பது மாவட்டங்களிலும் 636 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்டவர்களில், 304 குடும்பங்களைச் சேர்ந்த 1,247 பேர், 19 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கூடிய அளவில் கொரோனா தொற்றினால் முடக்கப்பட்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்தே காலநிலை சீரி;னமை நிலவிவருகின்றது.