November 22, 2024

கொரோனாவிலும் கொள்ளை!

கொரோனாவிலும் கல்லா கட்டும் ராஜபக்ச தரப்பை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக பதியுநர் ஒருவர்.

கோத்தபாயா ராஜபக்சே அவர்கள் தலைமையிலான அமைச்சரவை 18.03.2020 அன்று எடுத்த தீர்மானத்திற்கு அமைய 23.03 .2020 அன்று கோவிட்  19 பெரும் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்ட சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் ( COVID–19 (ITUKAMA) Healthcare and Social Security Fund)  பல்வேறு தரப்பினரிடமும் இருந்து நன்கொடைகளை சேகரித்து வந்தது

அந்தவகையில் இதுவரை 1,752,402,793 (One billion seven hundred fifty-two million four hundred two thousand seven hundred ninety-three) ரூபா சேகரிக்க பட்டு இருக்கின்றது .

குறித்த தொகையில் இதுவரை 391,479,824 (Three hundred ninety-one million four hundred seventy-nine thousand eight hundred twenty-four ) ரூபா செலவு செய்யப்பட்டு இருப்பதாக கோத்தபாயா ராஜபக்சே அவர்களின் அலுவலகம் தெரிவித்து இருக்கின்றது

அதாவது சேகரிக்கப்பட்ட பணத்தில் 23 % வீதமானவை செலவு செய்து இருப்பதாக அறிக்கையிட்டு இருக்கின்றார்கள் . இதில்,

இதில் PCR பரிசோதனைகளுக்காக வெறும் 42 மில்லியன் ( Rs 42,605,812) ரூபா பணத்தை செலவு செய்ததாக சொல்லும் கோத்தபாயா ராஜபக்சே அலுவலகம்

கோவிட 19 தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக (Awareness campaigns ) 62 மில்லியன் (Rs 67,543,967) ரூபா பணத்தை செலவு செய்து இருப்பதாக கணக்கு காட்டி  இருக்கின்றது

அதாவது PCR பரிசோதனைகளுக்கு செலவு செய்ததை விட ரூபா 20 மில்லியன்  அதிகமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களுக்காக (Awareness campaigns ) செலவு செய்து இருப்பதாக சொல்லுகிறார்கள்.

இலங்கையில் இதுவரை எதாவது கோவிட 19 தொடர்ப்பன காத்திரமான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் (Awareness campaigns ) மேற்கொள்ளப்பட்டதா ?

இல்லை என்பதே பதிலாக உள்ள நிலையில் கோத்தபாயா ராஜபக்சே அலுவலகம் 62 மில்லியன் ரூபா பணத்திற்கு  விழிப்புணர்வு பிரச்சாரங்கள் (Awareness campaigns ) மேற்கொள்ளப்பட்டதாக சொல்லுகிறது

இது தவிர இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் உருவாக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்காக (Quarantine centres and related procedures) மட்டும் 38 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டு இருப்பதாக சொல்லி இருக்கின்றார்கள்

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில்   தனிமைப்படுத்துதல் மையங்கள் (Quarantine centres and related procedures) உருவாக்க பட்ட நிலையில்  எந்தவொரு ஆளணி செலவும் ஏற்படவில்லை என சொன்ன ராஜபக்சே நிருவாகம்

இப்போது 38 மில்லியன் ரூபா பணத்தை தனிமைப்படுத்தல் மையங்களுக்காக செலவு செய்து இருப்பதாக கணக்கு காட்டுகின்றது

ஆனால் இந்த நிதியம் சார்ந்த நிருவாக செலவுகளுக்காக (Administrative expenditures) வெறும் 3000 ரூபா மட்டுமே செலவழித்து இருப்பதாக  கதை சொல்லி இருக்கிறார்கள்

1 பில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான பணத்தை கையாண்ட நிதியம் ஒன்றுக்கு வெறும் 3000 ரூபா மட்டுமே நிருவாக செலவுகள் ஏற்பட்டது என்கிற கதையை  யாராவது நம்ப முடியுமா ?

இது மட்டுமில்லாது தடுப்பூசி தொடர்பான செலவுகளுக்காக (Vaccination related expenses) 42 மில்லியன் ரூபா (41,545,980) செலுத்தப்பட வேண்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்

அதே போல அம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கியது தொடர்பில் வாகனம் ஒன்றுக்கு 19 மில்லியன் ரூபா அடிப்படையில்  10 அம்புலன்ஸ் வாகனங்களுக்கு 194 மில்லியன் ரூபா (Rs 194,000,000) செலுத்தப்பட வேண்டி இருப்பதாக  சொல்லி இருக்கிறார்கள்

இது தவிர ICU beds வாங்குவது தொடரபாக 7,75 மில்லியன் ரூபா (Rs 7,750,000) செலுத்தப்பட வேண்டி இருப்பதாகவும் கணக்கு சொல்லி இருக்கிறார்கள்

சஜித் பிரேமதாச தலைமையிலான பிரதான எதிர்க்கட்சி கூட மேற்குறித்த பகிரங்க கொள்ளைகள் பற்றி பேசுவதில்லை .

வெறும் 5000 ரூபா ஊழல் செய்த் அதிகாரிகளை நீதிமன்றங்களில் நிறுத்தும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுக்கள் இவ்வாறான கோடிக்கணக்கான களவுகள் குறித்து கவலைப்படுதில்லை

உண்மையில் இலங்கையில் கணக்காய்வாளர் திணைக்களதிற்கு இவ்வாறான பொது நிதி தொடரபாக அக்கறையே இல்லை  .