November 22, 2024

தடை:முட்டாள் அரசாங்கம்-மனோ சீற்றம்!

அரசாங்கத்தால் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தலின் பிரகாரம், மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை இன்று (11) நள்ளிரவு 12 மணிமுதல் அமுலாகும் என இராணுவம் அறிவித்துள்ளது.

ஆனாலும்  இந்த கட்டுப்பாடுகள் அத்தியாவசிய சேவைகளுக்குப் பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எப்போது முதல் மாகாணங்களிற்கு இடையிலான தடை அமுலுக்கு வருகின்றதென்பதில் குழப்பங்கள் உள்ளது.

மூன்று மாத குழந்தை இறக்கிறது. நாலு வயது குழந்தையும் இறக்கிறது. கர்ப்பிணி தாய்மார் இறக்கிறார்கள். நேற்று மட்டும் இறப்பு 26. தடுப்பூசி அடிப்பதில் ஒழுங்கில்லை. இப்படியே போனால் ஒரு நாள் இறப்பு விகிதம் இலங்கையில் 200ஐ தாண்டும் என வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது என போட்டுத்தாக்கியுள்ளார் மனோகணேசன்.

தமிழ்நாட்டில் முழுமூடல். மலேசிய நாட்டில் முழுமூடல்.

அதுதான் இலங்கையையும் குறைந்தபட்சம், மூன்று வாரங்களுக்காவது மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 20,000 கொடுத்து வீட்டில் இருக்க வைக்க சொல்கிறேன்.

எல்லோரும் பல்லைககடித்துக்கொண்டு வீட்டில் இருக்கனும்.

„லொக்டவுன்“ வேளையில் தடுப்பூசியையும் ஒழுங்கு படுத்தி கொடுக்கலாம்.

இல்லாவிட்டால், அரசாங்க ஆதரவாளரான முருத்தெட்டுவே ஆமதுருவே சொல்வதுபோல், „மக்கள் தெருக்களில் விழுந்து மடியும்“ நிலை வரலாம்.

இது அரசாங்கத்தின் முட்டாள் வால்களுக்கு புரியவில்லை.

அரசாங்கத்துக்கு புரியாமல் இல்லை. ஆனால் மூடாமல் இருக்க பிரதான காரணம், குறைந்த வருமான குடும்பங்களுக்கு பணம் கொடுக்க மனமில்லை.

சீனி வரி குறைப்பில்,  திறைசேரி இழந்ததாக, மத்திய வங்கியே ஒப்புக்கொண்ட 1600 கோடி இருந்திருந்தால், இதை செய்யலாம் என சொன்னால் அரசாங்க வால்களுக்கு கோபம் வருகிறது.

இப்படிதான் 2020ம் ஆண்டு 40,000ம் முதற்தொற்றாளர் இருக்கிறார்கள். அவர்களை உடனடியாக கவனியுங்கள் என நான் சொன்ன போது „மனோ கணேசனை கைது செய்தை விசாரியுங்கள்“ என ஒரு ஆமதுரு சீஐடிக்கு போய் சொன்னார்.

இப்போதும் போய் சொல்லுங்கடா என தாக்கியுள்ளார் மனோகணேசன்.