சைபர் தாக்குதலுக்கு உள்ளானது அமெரிக்காவின் மிகப்பொிய எண்ணெய் விநியோகம்!
அமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் விநிநோகம் சைபர் தாக்குதலால் பெரும் பாதிப்புக்குள்ளானதை அடுத்து அமெரிக்க அரசு ஞாயிற்றுக்கிழமை அவசரகால சட்டத்தை வெளியிட்டது.இச்சம்பவம் வெள்ளிக்கிழமை சைபர்-கிரிமினல் கும்பலால் முற்றிலுமாக தட்டப்பட்டது மற்றும் சேவையை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சைபர் தாக்குதல் குழுவால் பிணைத்தொகை கோருவதற்காக எரிசக்தி விநியோகக் குழாய்க் கட்டமைப்பு மீது இணைய ஊடுருவல் நடத்தப்பட்டது.
காலனித்துவ பைப்லைன் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய்களை எடுத்துச் செல்கிறது. டெக்ஸஸில் இருந்து நியூயார்க் வரை 9,000 கிலோமீட்டருக்கு எரிசக்தி விநியோகக் குழாய்க் கட்டமைப்பு வழியாக நடைபெறுகிறது. அமெரிக்காவின் கிழக்குக் கரை பகுதிக்குத் தேவையான கிட்டத்தட்ட பாதி அளவு எரிசக்தியை அது விநியோகம் செய்கிறது.
விநியோகம் தடைப்பட்டதால் சாலை வழியாக கொண்டு செல்லப்படும் எரிபொருள் தொடர்பான விதிகளை அவசரகால நிலை தளர்த்துகிறது.
அமெரிக்க பெட்ரோல் விலை திங்கள்கிழமை காலை 1.5% உயர்ந்துள்ளது, ஆனால் பணிநிறுத்தம் நீடித்தால் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த எரிபொருள் விநியோகத்தில்7 விமான நிலையங்கள் தங்கியிருக்கின்றன.