கட்டிலுடன் பஸில்: யாழ்.மாவட்ட செயலகத்திள்ளும் வந்தது?
இலங்கை முழுவதும் கொரோனா தொற்று கட்டுப்பாடற்று செல்ல தொடங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபனுக்கும் கொரோனாத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இன்று வடக்கில் 21 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் ஒருவர் மரணத்தையும் சந்தித்துள்ளார்.
இதனிடையே ஒரு நாளில் 2000 ற்கும் அதிகமான தொற்றார்கள் இனங்காணப்பட்ட நாளாக இன்றைய நாள் இலங்கையில் பதிவாகியுள்ளது.
இன்று 2672 பேருக்கு இன்று தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பத்து நாட்களுக்குள் பத்தாயிரம் கட்டில்கள் ஏற்பாடு செய்யப்படும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இதனைக் குறிப்பிட்ட பசில் ராஜபக்ச கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, புத்தளம், குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்த பத்தாயிரம் கட்டில்களுக்கு மேலதிகமாக மாவட்ட மட்டத்தில் மேலதிக சிகிச்சை நிலையங்களை இனங்கண்டு அவற்றுக்கு தேவையான கட்டில்களும் உபகரணங்களும் வழங்கப்படும் என்றும் , இதன் பொறுப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர்களுக்கு வழங்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இலங்கை பொறியியலாளர் முன்னணி வைத்தியசாலைகளின் தொழில்நுட்ப குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முன்வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.