März 28, 2025

மட்டக்களப்பில் விபத்து! வீதியில் சிதறின எரிவாயு சிலிண்டர்கள்!

எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனமொன்று, இன்று (09) காலை 10.40 மணியளவில் கோமாரி பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனத்தின் ரயர் பாலத்தில் வைத்து வெடித்த காரணத்தால் வாகனம் குடைசாய்ந்து இவ்விபத்து இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலைமையை சமாளிக்க சாரதி, திடீர் பிரேக் போட்டமையால் பாலத்தின் கீழ் விழாமல் வாகனம் காப்பாற்றப்பட்டது. எனினும், சிலிண்டர்கள் வீதியில் வீழ்ந்து சிதறின. அதிஸ்டவசமாக எதுவும் வெடிக்கவில்லை. அத்துடன், சாரதிக்கோ உதவியாளருக்கோ எவ்வித பாதிப்புமில்லை

அப்போது வீதியால் வாகனம் குறைவு என்பதால் ஏனைய வாகனங்களுக்கு எவ்வித பாதிப்புமில்லை. எனினும், சிறிது நேரம் பொத்துவிலுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.