உருமாறிய கொரோனாவுக்கும் வேலை செய்கிறது ஸ்புட்னிக் லைட்! ஒரு தடுப்பூசி போதும்!
ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி மருந்துக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. ரஷ்யாவில் பரிசோதிக்கப்பட்ட இந்த மருந்தை மற்ற தடுப்பூசிகள் போல இரண்டு டோஸ்கள் போடத் தேவையில்லை.
ஒரே டோஸில் இது கோவிட் நோய்க்கு எதிராக 79 புள்ளி 4 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுவதாக ரஷ்ய மக்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட்டதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் நிரூபணம் செய்துள்ளன.
அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊசி போட்டுக் கொண்டவர்களின் உடலில் நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த சீரிய அளவில் இருப்பதாக ஆய்வுகளை மேற்கொண்ட ரஷ்யாவின் நுண்கிருமிகள் மற்றும் தொற்று ஆய்வுக்கூடத்தின் தலைவர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்ட் தெரிவித்துள்ளார்.