Mai 12, 2025

முடங்கியது திருகோணமலை

திருகோணமலை மாவட்டத்தில் அதிக கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டதைத் தொடர்ந்து பல கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், திருகோணமலை நகர்ப் பகுதியில் மருந்தகங்கள், அத்தியாவசியத் தேவைகளுக்கான பொருட்கள் விற்பனைகள் தவிர்ந்த அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இதனால், திருகோணமலை மாவட்டத்தின் நகர்ப் பகுதி, கந்தளாய், மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய நகரப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.