நேற்று 25 மரணம்:திருமணத்திற்காவது அனுமதியுங்கள்!
கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட 25 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் மூவர் வீடுகளிலேயே மரணமடைந்துள்ளனர். இலங்கையில் அடுத்துவரும் நாட்களில் ஆபத்து நெருங்கிவருவதற்கான சமிக்ஞைகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
இதனால் இதுவரையில் கொரோனாத் தொற்றினால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 734 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே திருமணத்தை குறிக்கப்பட்ட நாளில் நடத்த அனுமதிக்குமாறு ஜோதிடர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம்.
திருமண வைபவம் உட்பட அனைத்து நிகழ்வுகளுக்கு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் திருமண நாள் நிச்சயிக்கப்பட்ட வீட்டார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பலர் சென்றுவருகின்றனர் எனினும் இதற்கு அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் ஜோதிடர்கள் கருத்து கூறுகையில் திருமண நாள் நிச்சியிக்கப்பட்டு நாட்கள் தவறினால் , அடுத்த திருமண நாட்கள் மாத கணக்கில் தள்ளி போகும் நிலை உருவாகியுள்ளதாகவும் சிலருக்கு நீண்ட நாட்களாக திருமண நாட்கள் கூடாமல் , திருமணம் கை கூடாமல் தோஷங்களால் பாதிக்கப்பட்டு இருந்து தற்போது நாள் குறித்துள்ள நிலையில் குறித்த நாளில் திருமணம் நடத்த முடியாவிட்டால் பின்னர் வருடங்கள் கடந்தும் திருமணம் கைகூடாது என ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.
இதனால் மிக எளிமையாகவாவது இரு வீட்டாருடனாவது திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என ஜோதிடர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.