November 25, 2024

கொரோனாவில் பணியாற்றி 2009 வெளிநாட்டவருக்கு குடியுரிமையை வழங்கியது பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா தொற்று நோயின் நெருக்கடியான சூழ்நிலையில் பணியாற்றி தொழிலாளர்களுக்கு அவர்களின் சேவையை மதிப்பளிக்கு வகையில் 2000 பேருக்கு மேற்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பிரஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என பிரஞ்சு அரசாங்கம் நேற்றுப் புதன்கிழமை அறிவித்துள்ளது.665 சிறுவர்கள் உட்பட 2009 பேருக்கு இக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடியுரிமைப் பொறுப்பான அமைச்சர் மார்லின் ஷியாப்பா தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 க்கு எதிரான போராட்டத்தில் இவர்கள் தீர்க்கமான பங்களித்த சுகாதாரப் பணியாளர்கள், பாதுகாப்பு காவலர்கள்,  குப்பை கேகரிப்பாளர்கள், வயோதிபர்களை பார்க்கும் பாராமரிப்பாளர்கள் மற்றும் பராமரிப்பு வேலையாட்களுக்கு இக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 8,000 க்கும் மேற்பட்டோர் குடியுரிமை பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப் படுவதாக ஷியப்பாவின் அலுவலகம் கூறியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் 61,371 பேர் பிரெஞ்சு குடியுரிமையைப் பெற்றனர். இது 2019 ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.