மரடோனாவின் மரணம்! சரியாகக் கண்காணிக்கப்படவில்லை! நிபுணர் குழு முடிவு!
ஆர்ஜென்டினா கால்பந்து முன்னணி நட்சத்திரமான டியாகோ மரடோனா இறப்பதற்கு முன்னர் குறைபாடு மற்றும் பொறுப்பற்ற சுகாதார சேவையைப் பெற்றார் என மருத்துவ நிபுணர்களின் குழு முடிவு செய்துள்ளது.கடந்த ஆண்டு நவம்பரில் கால்பந்து வீரர் 60 வயதில் மாரடைப்பால் இறந்த பின்னர் மரடோனாவின் மருத்துவக் குழுவை விசாரிக்குமாறு ஆர்ஜென்டினாவில் உள்ள சட்டவாளர்கள் குழுவிடம் கேட்டுக் கொண்டனர்.
நவம்பர் மாதத்தில் மூளை இரத்த உறைவுக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்த அவர், மது சார்புக்கு சிகிச்சையளிக்கப்பட இருந்தார்.
எல்லாக் காலத்திலும் மிகப் பெரிய கால்பந்து வீரர்களில் ஒருவரான மரடோனா கோகோயின் மற்றும் மது போதைப் பழக்கத்தை தனிப்பட்ட வாழ்க்கையில் கொண்டிருந்தார்.
1986 இல் ஆர்ஜென்டின உலகக் கோப்பை வெல்வதற்கு வழிநடத்திய மரடோனாவின் மரணம், கால்பந்து உலகத்தை துக்கத்தில் ஆழ்த்தியது, மேலும் அவரது மருத்துவ சிகிச்சை குறித்து கேள்விகளை எழுப்பியது.
அவர் இறந்த சில நாட்களுக்குப் பிறகு ஆர்ஜென்டினா சட்டவாளர்கள் அவரது பராமரிப்பில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் தாாதியர்கள் மீது விசாரணைகளைத் தொடங்கினர்.
மார்ச் மாதத்தில், வழக்குரைஞர்கள் 20 மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி மரடோனாவின் மரணத்திற்கான காரணத்தை ஆராயவும், ஏதேனும் அலட்சியம் இருந்ததா என்பதையும் ஆராய்தனர்.
குழுவின் கண்டுபிடிப்புகள் ஆர்ஜென்டினாவில் உள்ளூர் ஊடகங்களால் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டன.
70 பக்க அறிக்கையில், மரடோனா இறப்பதற்கு 12 மணி நேரத்திற்கு முன்னர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக குழு தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவர் சரியாக கண்காணிக்கப்படவில்லை என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
அறிக்கையை மேற்கோள் காட்டி, ஆர்ஜென்டினா செய்தித்தாள் கிளாரன், மரடோனாவின் மருத்துவக் குழு தனது உயிர்வாழ்வை விதிக்கு விட்டுவிட்டதாகக் குற்றம் சாட்டியது.
மரடோனா தனது வீட்டை விட ஒரு மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்றிருந்தால் உயிர் பிழைப்பதற்கான சிறந்த வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
மரடோனாவின் சுகாதாரக் குழு எடுத்த நடவடிக்கை போதாது, குறைபாடு மற்றும் பொறுப்பற்றது என்று குழு முடிவு செய்தது.
மரடோனாவின் தனிப்பட்ட மருத்துவர் லியோபோல்டோ லூக், 39, மற்றும் அவரது மனநல மருத்துவர் ஆகியோர் வழக்குரைஞர்களால் விசாரிக்கப்படும் மருத்துவ நிபுணர்களில் ஒருவர்.
இப்போது மருத்துவ குழு தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது, எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் கொண்டு வரலாமா என்று சட்டாவளர்கள் முடிவு செய்வார்கள். பரிசீலிக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் படுகொலையாகக் கூட இருக்கலாம் என்று கிளாரன் கூறினார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.