November 21, 2024

தயாராகின்றது நயினாதீவு கொத்தணி!

கொரோனா அபாயத்தின் மத்தியில் நயினாதீவில் வெசாக் ஏற்பாடுகள் மும்முரம் அடைந்துள்ளது.

இதனிடையே தனது பங்கிற்கு வடமாகாண கலாச்சார திணைக்களம் யாழ்.கோட்டை பகுதியில் வெசாக் வெளிச்சக்கூட்டிற்கான போட்டிக்கு அழைப்புவிடுத்துள்ளது.

முதலாம் பரிசாக 50ஆயிரமும் ஏனைய பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அபாய நிலைக்கு மத்தியிலும்  தேசிய வெசாக் நயினாதீவில் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இம்முறை தேசிய வெசாக் தினத்தை யாழ்ப்பாணம் – நயினாதீவுவில் நடாத்துவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டுப் பணிகள் அங்கு விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. வீதிகளை செப்பனிடுவதற்காக  கனரக வாகனங்கள் மூலம் மணல்கள் என்பன கடல் வழியாக மிதக்கும் பாதையூடாக கொண்டுசெல்லப்படுவதை அவதானிக்க முடிந்தது.

வெசாக் தின நிகழ்வுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து அதிகமானவர்கள்  வருவதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்றுவரும் இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.