März 28, 2025

வடமராட்சி கிழக்கில் இன்றும் சூடு!

வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கன்ரர் வாகனம் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூட்டினை இன்று காலை நடத்தியுள்ளது.சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற போது கடற்படையினரால் வழி மறிக்கப்பட்டதாகவும் எனினும் நிறுத்தாமல் கடற்படையினரை மோத முற்பட்ட போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதே பகுதியில் இம்மாத முற்பகுதியில் காவல்துறை அதிரடிப்படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தியிருந்ததில் கடத்தல்காரர்கள் காயமடைந்துள்ளமை தெரிந்ததே.

எனினும் இன்றைய துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட சேதவிபரம் தெரியவந்திருக்கவில்லை.