November 21, 2024

இந்தியாவில் நடந்த கொவிட் திருமணம்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள ரத்லத்தில் கொவிட் பாதுகாப்பு ஆடைகளுடன் ஒரு தம்பதியினர் திருமணம் செய்ய அனுமதிகப்பட்டுள்ளன.உள்ளூர் அதிகாரிகள் குறித்த அதிக அக்களை கொண்டிருந்தார்கள். பின்னர் தொடர்ச்சியாக நடந்த கலத்துரையாடல்களை அடுத்து முழுமையான கொரோனா பாதுகாப்பு கவசங்களை அணிந்து திருமணம் செய்ய ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து திருமணம் நடந்து முடிந்துள்ளது.

கடந்த 19 ஆம் திகதி மணமகன் கொரோனா மருத்துவ சோதனையை நடத்தியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து உள்ளூர் அதிகாரி தெரிவிக்கையில்:

திருமணத்திற்கான வெறு நகரில் இருந்து இங்கே நபர்களை வந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பாக மணமகனுக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் எமக்கு தகவல் கிடைத்தது. கொரோனா தொற்றுடன் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அறிந்தோம்.

அதைத் தொடர்ந்து குறித்த திருமண இடத்திற்கு விரைந்தோம். திருமணத்தை நிறுத்தினோம். திருமண வீட்டினர் தாழ்மையுடன் பல தடவை வேண்டுகோளை விடுத்தனர். அதன் பின்னர் நடத்த நீண்ட கலந்துரையாடல்களை அடுத்து முழுமைாயன கொரோன பாதுகாப்பு கவசங்களுடன் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டார்கள் என்றார் அந்ந அதிகாரி.