November 21, 2024

இத்தாலியின் முன்னால் போராளிகள் 7 பேர் பிரான்சில் கைது!

தீவிர இடதுசாரி போராட்ட குழுவான சிவப்பு படைப்பிரிவின் (Red Brigades) முன்னாள் போராளிகள் 7 பேர் பிரான்சில் கைது செய்யபட்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் இத்தாலியால் இன்றும் தேடப்பட்டுவருகின்றவர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர். 1970 ஆண்டு தொடக்கம் 1980 வரையான காலப்பகுதிகளில் இத்தாலியில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதால் தண்டணை பெற்றிருந்தார்கள். அன்று இடதுசாரி தீவிரவாதிகளுக்கு 1980 களில், பிரான்சின் அப்போதைய சோசலிச ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோண்ட் பாதுகாப்பை வழங்க முன்வந்தார். அத்துடன் அவர்கள் வன்முறையை கைவிட்டனர்.

இப்போராட்ட அமைப்பின் உறுப்பினர்கள் மீது 1978 ல் முன்னாள் பிரதம மந்திரி ஆல்டோ மோரோவைக் கடத்தி கொலை செய்தது உட்பட ஏராளமான பல கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

கைது செய்யப்பட்டவர்களில் ரெட் பிரிகேட்ஸ் உறுப்பினர்கள் மற்றும் தீவிர இடது போராளி குழுவின் இணை நிறுவனர் லோட்டா கான்டினுவா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

நீண்டகாலமாக இத்தாலிங்கும் பிரான்சுக்கும் இப்பிரச்சினையால் பதற்றநிலை தொடர்ந்தவண்ணம் இருந்தது. இத்தாலியால் 200 பேர்களை கைது செய்து ஒப்படைக்குமாறு அழைப்பு விடுத்திருந்தது.

இரு நாடுகளுக்கிடையில் பல மாதங்களாக நடந்த கலந்துரையாடல்களைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாக பிரான்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.