März 28, 2025

முகக்கவசம் அணியாததால் தாய்லாந்துப் பிரதமருக்கு அபராதம்!

முகக்கவசம் அணியாததால் தாய்லாந்துப் பிரதமருக்கு அந்தநாட்டு நிர்வாகம் 158.39 யூரோக்களை (6,000 பாட்) அபராதமாய் விதித்துள்ளது.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா முக கவசம் அணியாமல் பங்கேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரதமரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, பாங்காக் நிர்வாகம் அவருக்கு 6 ஆயிரம் பாட் (158.39 யூரோக்களை) அபராதம் விதித்தது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் பிரயுத் சான் ஓச்சா மீது காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளதாக பாங்காக் ஆளுநர் அஸ்வின் குவான்முவாங் தெரிவித்தார்.