November 21, 2024

யேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுக்கு  உதவி!

கொரோனா இரண்டாம் அலை.. இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம்.. யேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல்.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியர்களுக்குத் தடை வித்துள்ள ஜெர்மனி, மறுபுறம் இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம் ஒன்றைத் தயார் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பரவல் கடந்த ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ஆக்சிஜன், கொரோனா சிகிச்சைக்குத் தேவையான மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு உதவுவதாக அறிவித்து வருகின்றன.
இந்நிலையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் இந்தியாவுக்கு உதவி அவசர திட்டத்தைத் தயார் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்றால் மீண்டும் கொடூரமான துன்பங்களை எதிர்கொள்ளும் இந்திய மக்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவிக்கக் கொள்கிறேன்.
இந்த தொற்றுக்கு எதிரான போராட்டம் என்பது பொதுவான ஒரு போராட்டமே. ஜெர்மனி இந்தியாவுடன் எப்போதும் கைகோர்த்து நிற்கிறது இந்தியாவுக்கு உதவும் வகையில் அவசர திட்டம் ஒன்றையும் ரெடி செய்து வருகிறோம்“ என தெரிவித்தார்.