வடக்கிற்கு கண்டம்?
எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அண்மைய நாட்களில் கொரோனா தொற்று அதிகரித்து நிலைமை காணப்படுகின்றது .அதிகரித்த கொரோனா தொற்றின் காரணமாக சில பகுதிகளை முடக்க வேண்டி ஏற்பட்டது. எனினும் கடந்த வாரத்தில் யாழ் மாவட்டத்தில் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 5 இறப்புகள் பதிவாகியுள்ளது.
உண்மையிலே கடந்த வருடத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தாக்கத்தினால் இறப்புகள் பெரிதாக இடம்பெறவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதைவிட இலங்கையில் தற்போது புது வருட கொண்டாட்டங்களின் பிறகு கொரோனா தொற்று பரம்பல் மிகத் தீவிரம் அடையலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது .
புத்தாண்டு காலப்பகுதியிலே பொதுமக்கள் வெளி மாவட்டங்களுக்கான பயணங்கள் மேற்கொண்டமை பொது போக்குவரத்துகளை பயன்படுத்தியமை மற்றும் வணக்கத் தலங்களில் ஒன்று கூடியமை இதன் காரணமாக தொற்று பரவல் அதிகரிப்பு ஏற்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தற்போது திருவிழாக்கள் உள்ளிட்டவை களை கட்ட தொடங்கியுள்ள நிலையில் மக்களை அணி திரள்வதை தடுக்க மத தலைவர்கள் உதவ வேண்டுமெனவும் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.