நொடிப்பொழுதில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள்! அமெரிக்காவிலுள்ள இலங்கை விஞ்ஞானி சாதனை
நொடிப்பொழுதில் கொரோனா பரிசோதனை முடிவுகளை வழங்கும் ஒரு புதிய யுக்தியை அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
குறித்த குழுவுக்கு இலங்கை விஞ்ஞானி துவினி தினுஷிகா ராஜபக்ஸ தலைவராக இருப்பது ஒரு சிறப்பான செய்தியாகும்.
“நாங்கள் இப்போது பி.சி.ஆர் பரிசோதனை செய்தால் முடிவுகள் வர குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
ஆனால் இப்போது அது தேவையில்லை. இந்த கண்டுபிடிப்பின் மூலம் நாம் 30 வினாடிகளில் முடிவுகளை கொடுக்க முடியும்.
வெறுமனே ஒரு பலூனை ஊதி, அதில் உள்ள காற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் இது செய்யப்படுகிறது ” என்று விஞ்ஞானி துவினி தினுஷிகா ராஜபக்ஸ கூறினார்.