November 21, 2024

பிரான்சு MANDRES-LES-ROSES நகரசபை முன் தமிழினப்படுகொலைக்கு நீதி கோரிப் போராட்டம்

இலங்கையில் ஈழத்தமிழர்கள் கடந்த 73 ஆண்டுகளாக இனஅழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள இலங்கை பேரினவாத அரசாங்கங்களின்

இனப்படுகொலை முகத்தை உலகத்துக்கு அம்பலப்படுத்தி அதன் மூலம் இனப்படுகொலையாளிகளை சர்வதேச நீதி மன்றத்துக்கு கொண்டு செல்வதற்கான அளுத்தங்களை நாடுகள் ஊடாக வழங்கும் நோக்குடன் இனப்படுகொலை ஆதாரங்களான நிழற்படங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களை பார்வைக்கு பணியை மேற்கொண்டுவரும் பிரான்சு அனைத்துலக மனித உரிமைச் சங்கம் தமிழ் பண்பாட்டு வலையம் என்பன பிரான்சு நாட்டில் பாராளுமன்றம் பிரான்சிலுள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்கள் நகரசபைகள் என்பவற்றின் முன் தொடர்ந்து இனப்படுகொலை ஆதாரங்களை வைத்து நீதி கோரி போராடிவருகின்றனர்.அந்த வகையில் இன்று பிரான்சு  4 Rue du Général Leclerc, 94520 Mandres-les-Roses நகரபை முன்பாக தமிழினப்படுகொலை நிழற்படங்களை பார்வைக்கு வைத்தபோது நகர சபையின் பிதா  உறுப்பினர்கள்  பூரண ஒத்துழைப்பு வழங்கியதுடன் தமிழினப்படுகொலை நிழற்படங்களை பார்வையிட்டு அந்த வரலாற்று விடயங்களை கேட்டறிந்துகொண்டமையும் இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்கது.இவ்வாறுதான் சிறுகசிறுக உலகத்தின் இதயங்களை ஈழத்துக்காக திறக்க வைக்கும் பணி இடைவிடாத முயற்சியின் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இதன் பலன் நிச்சயமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் அறவழிப்போராட்டம் தொடர்கின்றது.