யாழில் கைது:காட்டி கொடுத்ததா இந்திய உளவுத்துறை?
வெளியே சீனா- இலங்கை உறவு,இந்தியா சீற்றமென கதைகள் கட்;டப்பட்டு வருகின்ற போதும் வடகிழக்கு தமிழர் தாயகம் தொடர்பில் இருநாட்டு புலனாய்வு கட்டமைப்புக்களும் தொடர்ந்தும் உறவை சிறப்பாகவே பேணிவருகின்றன.
விடுதலைப்போராட்டத்தை மௌனிக்க வைத்த இத்தகைய உறவு புலிகளது மீள் உருவாக்கம் தொடர்பில் தொடர்ந்தும் கவனத்துடன் இருப்பது உறுதியாகியுள்ளது.
அண்மையில் இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்திய உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் நால்வர் யாழ்ப்பாணத்தில்கைது செய்யப்பட்டுதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும் கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களது கைதின் தொடர்ச்சியாக புதுக்குடியிருப்பிலும் இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.