November 21, 2024

பிரச்சினைக்குத் தீர்வைக் கேட்டால் மேலுமொரு பிரச்சினையை உருவாக்கிறது அரசு’ ஜி.ஶ்ரீநேசன்,மட்டக்களப்பு.


ஜனநாயக ரீதியாக அகிம்சை வழிமுறையில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்குமாறு அரசிடம் கோரினால், இனவன்முறைகள், இனவழிப்புகளைப் பதிலாக அரசு கொடுத்தது. தற்போது ஜனாசாக்க்களை எரிக்காது அடக்கம் செய்யுமாறு தமிழ் பேசும் மக்கள் கோரியதற்கு,இரணை தீவில் சடலங்களைப் புதைக்கலாம் என்று அங்கு வாழும் மக்களுக்கு மேலுமொரு பிரச்சினையை அரசு உருவாக்கியுள்ளது. சமூகங்களைப் பிரித்தாளுவதே அரசின் நோக்கமாக இருக்கிறது. தேசிய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்பதெல்லாம் வெறும் வாய்ப்பேச்சுகளாகவே உள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதெல்லாம் ஓரினத்திற்குச் சாதகமான ஓசையாகவே இருக்கிறது. சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து 73 ஆண்டுகளாக சிங்கள அதிகார வர்க்கமே ஆட்சி செய்கிறது.நாட்டில் அபிவிருத்தியோ, அமைதியோ ஏற்படவில்லை. தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவுமில்லை. உள்நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை ஆட்சியாளர்களுக்கு இல்லாததால் பிரச்சினை சர்வதேசம்வரை நீண்டுள்ளது. சண்டித்தனத்தால் பிரச்சினைகளை உருவாக்கலாம். சமாதானத்தை உருவாக்க முடியாது. சாணக்கியம்,சாதுரியம், மனித நேயத்தால்தான் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இந்த நாடு மியன்மாரின் இராணுவாட்சித் தடத்தைப் பின்பற்றப் போகிறதா? இல்லை தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலாவின் ஜனநாயகத் தடத்தைப் பின்பற்றப் போகிறதா?என்பது தான் எனது கேள்வியாகும்.பதினொரு ஆண்டுகளாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதியையும்,நிரந்தரமான அரசியல் தீர்வினையும் ஜனனாயக வழிமுறையிலும்,சாத்வீகப் போராட்ட வழியிலும் கோரினர்.அகிம்சை வழியில் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தினை சிவில் அமைப்பினர் மத்த்தலைவர்களையும்,மக்களையும்,மக்கள் பிரதிநிதிகளையும் இணைத்து பல்லாயிரக் கணக்கானவர்களையும் இணைத்து மேற்கொண்டனர்.பொலிஸார்,அதிரடிப் படையினர் பல தடங்கல்கள்,இடையூறுகளை ஏற்படுத்திய போதிலும் அகிம்சைவழியைக் கைவிடாமல் மக்கள்ளின் எழுச்சிப் போராட்டம் 600 கிலோமீற்றர்களையும் கடந்து 5 நாட்களில் பொலிகண்டி என்ற இலக்கை சென்றடைந்தது.காந்திய வழிமுறையிலும்,தந்தை செல்வாயிச வழியிலும் பயணித்த,தமிழ் பேசும் மக்களின் அகிம்சைப் போராட்டத்தினை இம்சைவழிக்குத் திருப்ப பொலிசார்,அதிரடியினர் முயன்ற போதும் மக்களின் அகிம்சை ஆயுதத்தால் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.தற்போது பொலிசார் மக்கள் எழுச்சியாளர் ஒவ்வொருவருக்கும் பல விசாரணைகளை மேற்கொள்ளுகின்றனர்.பல வழக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.அதாவது ஒரு பிரச்சினையைத் தீர்க்க முற்பட்டால் பல பிரச்சினைகளை உருவாக்கி மக்களை அச்சுறுத்துகின்றனர்.சாத்வீக வழிமுறையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் எமது மக்களைப் பொலிசார் தடையுத்தரவுகள் மூலமாக வம்புக்கு இழுக்கின்றனர்.தம்மை வருத்தி எமது மக்கள் போராடும்போது அவர்களை வருத்த வேண்டிய தேவை அரசுக்கு இரக்கவே கூடாது.நியாயமான போராட்டத்திற்குத் தேவை நியாயமான தீர்வேயன்றி,அநியாயமான அடக்குமுறையல்ல என்பதை அரசு உணர்ந்தாக வேண்டும