Dezember 3, 2024

மூன்றாவது அலை:தயாராகும் ஊடகவியலாளர்கள்!

இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை தொடர்பில் அச்சம் வெளியிடப்பட்டுவருகின்ற நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகத்தில் ஊடக பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்களது பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுவருகின்றது.

இதன் ஒரு அங்கமாக இலங்கை தமிழ் சங்கம் – அமெரிக்காவுடன் இணைந்து யாழ்.ஊடக அமையம் களத்தில் பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களது பாதுகாப்பு கருதி கொரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்கும் பணியினை ஆரம்பித்துள்ளது.

அதன் முதற்கட்டமாக யாழ்.ஊடக அமையத்தினால்;  இலங்கை தமிழ் சங்கம் –  அமெரிக்கா நிதி உதவியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட கொரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் ஊடகவியலாளர்களிற்கு விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களை சேர்ந்த ஏனைய ஊடகவியலாளர்களிற்கும் தொடர்ந்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களிற்கும் கொரோனா தொற்று பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களை சேர்ந்த ஊடகவியலாளர்கள் தமது ஊடக அமைப்புக்கள் ஊடாக யாழ்.ஊடக அமையத்தின் நிர்வாக இணைப்பாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் கு.செல்வகுமாரை தொடர்புகொள்ள கோரப்பட்டுள்ளது.