பற்றி எரிகிறது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள வரலாற்று ஆடைத் தொழிற்சாலை!!
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள நீண்ட வரலாற்றைக் கொண்ட ஆடைத் தொழிற்றாலை ஒன்று தீயினால் பற்றியெரிந்துள்ளது. இதன்போது தீ அணைப்பு வீரர் ஒரு உயிரிழந்துள்ளார். மேலும் இரு தீ அணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர்.இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி 12:30 மணியளவில் நெவ்ஸ்கயா மனுபக்துரா கட்டிடத்தின் ஆறு தளங்களுக்கும் விரைவாகத் தீ பரவியது. தீயணைப்பு முயற்சியில் தீயணைப்பு வீரர்களுக்கு பலத்த காற்று இடையூறாக இருந்ததுள்ளது.
இக்கட்டிடம் 1841 ஆம் ஆண்டு முதலம் ஆடைகள் தயாரிக்கப்பயன்படுகின்றது. இக்கட்டிடம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு முக்கிய அடையாளமாகும்.
தீ பரவியதையடுத்து கட்டிடத்தில் இருந்து 40 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கட்டிடத்தின் கூரைகள், தகரங்கள் மற்றும் தளம் இடிந்து விழுவதாக ரஷ்யாவின் அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீயை அணைக்க 300க்கு மேற்பட்ட வீரர்கள் போராடி வருகின்றனர்.
ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வழியாகச் செல்லும் நெவா ஆற்றின் கரையில் நெவ்ஸ்கயா மனுபக்துரா அமர்ந்திருக்கிறது.
இத்தொழிற்சாலை சோவியத் யூனியன் காலத்தில் அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. பின்னர் 1992 இல் தனியார்மயமாக்கப்பட்டது.
அண்மைய ஆண்டுகளில் கட்டிடத்தின் பாகங்கள் துணி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற பகுதிகள் அலுவலக இடமாக வாடகைக்கு விடப்பட்டன அல்லது கைவிடப்பட்டதாக AFP தெரிவித்துள்ளது.
2001 ஆம் ஆண்டில் இந்த தொழிற்சாலை செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கின் வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக மதிப்புமிக்க தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை, மேலும் விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.