März 28, 2025

தொடர்ந்தும் சிறைக்கு தடை!

தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட அரசு தொடர்ந்தும் தடை விதித்தே வருகின்றது.

இலங்கையில் இம்முறை புத்தாண்டு காலத்தில் சிறைக் கைதிகளைப் பார்வையிடும் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வழமைப் ​போலவே மாதத்தில் ஒரு தடவை மாத்திரமே கைதிகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்படும் என்பதுடன், இதன்​போது கைதியொருவரைப் பார்வையிட இருவருக்கே வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.

கொரோனா தொற்று காரணமாக இந்த கட்டுபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.