வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டும் – அமெரிக்கத் தூதுவர்
இலங்கை அரசாங்கங்களினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் முழுமையான நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்று இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தூதுவர் அலைய்னா பி.டெப்லிட்ஸ் கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரிக்கு நாளேட்டுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.அத்துடன், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான நீதிப் பொறிமுறையொன்றை ஸ்தாபித்தல் போன்ற வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய ஏனைய கவலைகள் எழுந்துள்ளன. ஆட்சிமுறையின் ஜனநாயக பண்புகளை நிலைநாட்டி, சட்டத்தின் ஆட்சியை மதிப்பதோடு சிறுபான்மையின சமூகங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெற்காசியாவின் மிகப் பழைய ஜனநாயக தேசத்தின் ஜனநாயக நண்பன் என்ற வகையில் அமெரிக்கா இலங்கையிடத்தில் இந்த விடயங்களை எதிர்பார்க்கிறது என்றார்.