Mai 12, 2025

பளையில் விவசாய பண்ணை!

 

கிளிநொச்சி பளைப்பிரதேசத்தில் முன்னாள் ஊடகவியலாளர் ஒருவரால் உருவாக்கப்பட்ட விவசாய பண்ணையின் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன்,எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் சிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையமாக அவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஊடகப்பணியிலிருந்து விலகி விவசாய பண்ணையில் களமிறங்கிய அவரது முயற்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது.