November 22, 2024

தெற்கை திசைதிருப்பவே மணி கைதா?

தமிழ் முஸ்லீம் அரசியல் மற்றும் சமூக பிரமுகர்கள் மீது பயங்கரவாத சட்டத்தை ஏவி விடும் மோசமான பணிகளை ராஜபக்சே நிருவாகம் செய்து வருகின்றது .

சீரழிந்து பொருளாதார நெருங்கடிங்களில் இருந்து அப்பாவி சிங்கள சமூக மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கில் ராஜபக்சே குடும்பதிற்கு மணிவண்ணன் போன்றவர்களது கைதுகள் தேவையானதாக இருக்கின்றதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மாநகர சபையில் நடைமுறையில் உள்ள நகரத்தின் பொது சுகாதாரத்தை உறுதிப்படுத்தும்  ஆளணி  பிரிவை தங்களுடைய வெறும் 5 ஊழியர்களை மட்டும் கொண்டு யாழ்ப்பாண மாநகர சபை  உருவாக்குவது எந்த அடிப்படையில்  பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு துணை போவதாக கருத பட முடியும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகரசபை நடைமுறைப்படுத்தும் பணிகளை  யாழ்ப்பாண மாநகர சபை நடைமுறைப்படுத்த முடியாத சூழல் அருவருக்க தக்கது

உண்மையில் சட்டத்தரணி மணிவண்ணன் கைது மட்டுமல்ல சில வாரங்களுக்கு முன் அரசியல் மற்றும்  ரீதியான கருத்துக்களை பொது வெளியில் முன்வைத்து இருந்த மேல் மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி  பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்

சில மாதங்களுக்கு முன் எந்த அடிப்படையும் இன்றி மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்கிற  பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது பல மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கிறார்

மன்னாரை சேர்ந்த கவிஞர் அஹ்னாவ் ஜசீம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த ஒரு வருடமாக தனது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு கூட  அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்

இதனிடையே மணிவண்ணன் கைது செய்யப்பட்டமையை, தமிழ் முற்போக்கு கூட்டணி கடுமையாக கண்டித்துள்ளது.

கைதிற்கு பதில் அவர் மீது குற்றம் சாட்டி, எழுத்து மூல விளக்கம் கோரும் சட்டபூர்வ நடவடிக்கையை வடமாகாண ஆளுனர் எடுத்து, நிதானமாக நடந்துக்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் அவரது கைதை கண்டித்து, ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க முன்னர், தமிழ் மகாஜனம், தனது முகத்தை  நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இந்த கைது அரசாங்கத்தினரை மட்டுமல்ல, நம்மவர்கள் சிலபலரையும் திருப்தியடைய செய்திருக்கிறது என நான் அறிகிறேன்.

கோபத்துடனும், மனவருத்தத்துடனும் ஒருசேர இதை இப்போது ஒரு தமிழ் இலங்கையனாக கூறுகிறேன் என மனோகணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.