தூதரகத்தில் பதிவு செய்யாமல் கத்தாரிலிருந்து இலங்கை பயணிப்பது எப்படி?
வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள் தூதரகத்தில் பதிவு செய்யாமல் இலங்கை பயணிக்க முடியும் என்பதாக இன்று இலங்கை இராணுவத் தளபதிவும், கொரோனா தடுப்புக் குழுத்தலைவருமான சவேந்திர சில்வா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். என்றாலும் அது எவ்வாறு என்பது தொடர்பான விபரங்கள் ஊடகங்களில் வெளியாகவில்லை. என்றாலும், கத்தாரிலிருந்து இலங்கைக்கு தூதரக பதிவு இன்றி பயணிக்க முடியும் என்பதாக டிராவல் ஏஜென்சி தங்களது விளம்பரங்களை பகிர ஆரம்பித்துள்ளன.
இது தொடர்பாக கத்தாரில் அமைந்துள்ள Cozmo Travel யினால் தனிப்பட்ட முறையில் கத்தார் தமிழுக்கு அனுப்ப பதிவு இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது.
Special flight to Colombo by SriLankan Airlines 09/11/12/13/14/1516 Apr starting from 1435 Riyal1.Negative test required before travel2.1200 Riyal quarantine charges to be paid upon arrival in Colombo Airport3. Arrival PCR 220 Riyal from Sri lanka4.Embassy registration not required5.Luggage 45kg Plus 7kg hand bag6.If 14 days completed after second dose of vaccination only 1 day hotel quarantine requiredLimited seats44 369 444332 10 177/502 74 720/33662048/66993202/66862284
இலங்கை விமானச்சேவையால் எதிர்வரும் 9, 11, 12, 13, 14, 15, 16ம் திகதிகளில் சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பயணிக்க விரும்புவர்கள்
- கத்தாரிலிருந்து பயணிக்க முன்னர் கொரோனா எதிர்மறை சான்றிதழ் கொண்டிருத்தல் வேண்டும்
- இலங்கை விமான நிலையத்தில் 1200 றியால்கள் தனிமைப்படுத்தல் கட்டணம் செலுத்த வேண்டும்
- இலங்கையில் தரையைிரங்கியதும் PCR பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கான கட்டணம் 220 றியால்கள்
- தூதரகத்தில் பதிவு செய்யத் தேவையில்லை
- பணிப்பவர்கள் 45 கிலோ பயணப்பொதியையும்(Luggage ), 7 கிலே கைப்பொதியை(hand bag) கொண்டு செல்ல முடியும்
- கத்தாரில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று 14 நாட்கள் நிறைவடைந்து இருந்தால் 1 நாள் மட்டுமே ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படும்
ஏனைய தொடர்புகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழையுங்கள்
44 369 444
332 10 177/
502 74 720/
33662048/
66993202/
66862284
முக்கிய குறிப்பு – பயணிக்க விரும்புவர்கள் மேலே வழங்கப்பட்டுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.