März 28, 2025

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஆயருக்கு அஞ்சலி.

மன்னார் மறை மாவட்டத்தின் ஆயராக சேவை புரிந்து காலமான பேராயர் ராயப்பு யோசெப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .
வவுனியா – இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் குறித்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது . இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி , மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் , கறுப்புக்கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கதினமும் அனுஷ்டிக்கப்பட்டது .
இதன்போது கருத்து தெரிவித்த வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , எமது இனத்திற்காகவும் , நீதிக்காகவும் போராடிய உன்னதமான மனிதராக அவர் இருந்தார் . பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அவரது மரணம் எமக்குப் பேரிழப்பாகவே இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளனர்.