நீதிமறுக்கப்பட்ட நாட்டிலிருந்து „நீதியின் குரலுக்கு“ இன்று பிரியாவிடை.
இலங்கையில் தமிழ்மக்கள் மீது நடந்த இனப்படுகொலையில் 146 000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் எனக்கூறிய போரின் வலுமிக்க சாட்சியமாகவும்,இறுதியுத்தத்தின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடிய நல்லாயனாகவும், இலத்தீன் அமெரிக்காவில், எல்சல்வடோர் நாட்டு அரச அடக்குமுறைக்கெதிராக மக்கள் விடுதலையை மையப்படுத்தி எவ்வாறு பேராயர் ஒஸ்கார் றொமேறோ உருவானாரோ, அதே சமூக, அரசியல் வரலாற்றுச் சூழலில் சிறிலங்காவின் ஒஸ்கார் றொமேறோவாக உருவாகிய ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று விடைபெறுகிறார்.🖤
„விடைபெறுங்கள் ஆண்டகையே,.. விண்ணுலகில் எங்கள் உறவுகளைக் கண்டால்,உங்களுக்கான நீதி கிடைக்கவில்லை, உங்கள் உறவுகள் இன்னும் கண்ணீருடனேயே வாழ்கிறார்கள் எனக் கூறிவிடுங்கள்.🖤