6000 வாள்கள் தொடர்பில் விசாரணை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்பத்தில் சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அவன்தி பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயாதுன்ன கொரயா ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.