நடந்ததென்ன:மனோகணேசன் அம்பலப்படுத்தினார்!
நேற்றைய தினம் இலங்கை பொலிஸார் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நடந்ததை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் வெளியிட்டுள்ளார்.
மஹரகமை நகர வீதியில் லொறியை ஓட்டி வந்த ஹப்புதளையை சேர்ந்த கலைமகன் பிரவீன், அவ்வீதியில் பணியில் இருந்த மஹரகமை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் மைத்திரிபாலவின் மீது மோதி உள்ளார்.
அதனால் ஆத்திரமடைந்த அங்கே பணியில் இருந்த இன்னொரு போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீன், லொறி சாரதி கலைமகன் பிரவீனை சராமாரியாக தாக்கியுள்ளார்.
அந்த காணொளிதான் உலகம் முழுக்க வைரலாகி தெறிக்கிறது.
லொறி மோதலில் காயமடைந்த மைத்திரிபால இப்போது களுபோவில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல் நடத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் இஸ்மாயில் ரிபைடீனும், பொறுப்பற்ற முறையில் வாகனம் செலுத்திய கலைமகன் பிரவீனும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவத்தை நாம் சரியாக புரிந்துக்கொண்டு இந்த பிரச்சினையை தேவையற்ற இடத்துக்கு கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும்.
இத்தகைய பொலிஸ் அத்துமீறல் சம்பவங்களில், பொலிஸ் அதிகாரிகளின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படல் அவசியம் என்பது ஒரு சர்வதேச நியதி. அதுதான் அவர்களை அடையாளத்துடன் பொறுப்பு கூற வைக்கும்.
இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் பொலிஸ் என்று கிடையாது. ஒரே இலங்கை பொலிஸ்தான் உள்ளது. ஒருவேளை பணியில் ஒரு தமிழ் பொலிஸ்காரர் இருந்திருந்தாலும் இப்படிதான் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இலங்கை பொலிஸ் சீருடையை அணிந்தாலே எல்லோருக்கும் இந்த அத்துமீறல் போக்கு ஏற்படுகிறது. அவரது வார்த்தை பிரயோகமும் பிழை.
தங்களது பெரும்பான்மை இன பொலிஸ் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்க சிறுபான்மை இன இலங்கை போலீசார், “ஓவராக” நடந்துக்கொள்வதை இதுபோன்ற பல இடங்களில் தமிழ் பேசும் மக்கள் பார்த்துள்ளோம்.
இனி என்ன நடக்கும் என கண்காணிக்க வேண்டும் என மனோகணேசன் தெரிவித்துள்ளார்.