சூயஸ் கால்வாயில் தரைதட்டிய கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியது!
சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிவ்வன் என்ற சரக்கு கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ் கால்வாயின் இரண்டு பக்க கரைகளில் மோதி சிக்கிக்கொண்டது.இதனால் அந்த வழித்தடத்தில், கப்பல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 280-க்கும் அதிகமான கப்பல்கள் சூயஸ் கால்வாயை கடக்க முடியாமல் நடுக்கடலில் நிற்கின்றன. இந்த சம்பவத்தால், சர்வதேச வர்த்தகம், பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பலை மிதக்க வைப்பதற்கான முயற்சிகள் கடந்த 5 நாட்களாக நடந்து வந்தன. ஆனால் அந்த முயற்சிகள் படுதோல்வியில் முடிவடைந்தது.
கப்பலை மீண்டும் நீரில் மிதக்க வைக்கும் முயற்சியில் 12 இழுவை படகுகள் பணியாற்றி வரும் நிலையில் அது போன்ற மேலும் 2 படகுகள் வரவழைக்கப்பட்டன. இதுவரை 20 ஆயிரம் டன் மணல் அகற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் சூயஸ் கால்வாயில் தரை தட்டிய எவர் கிரீன் கப்பல் மிதக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.