திருநெல்வேலி முடக்கப்படுகிறது?
திருநெல்வேலியில் ஒரு பகுதியை முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிய முடிகிறது,
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை 746 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 127 பேர் திருநெல்வேலி பொது சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆவார்கள்.
இந்நிலையில் திருநெல்வேலியின் ஒரு பகுதியை முடக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு எழுமாற்றாக பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளை தற்போதைய யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலர் தலைமையில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் புதிய நடைமுறைகள் தொடர்பிலான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.