கோத்தாவின் சாதனைகள் என்ன?
கோத்தா அரசின் சாதனைகளை சமூக வலை பதிஞர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
அடுத்த முறையும் கோத்தாவை ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிப்பில்லையென்ற உட்கட்சி முறுகல் மத்தியில் ஒருவருட சாதனையினை அம்பலப்படுத்தியுள்ளார் குறித்த வலைப்பதிவர்.
165 அமெரிக்க டொலர் மற்றும் 147 அமெரிக்க டொலர் என விலை மனு கேட்கப்பட்டிருந்த நிலையில் குறைந்த விலைமனு கோரியவரை நிராகரித்து 165 டொலருக்கு விலை மனு கோரியவருக்கு இன்மனைட் விற்பனை செயய அனுமதி அளித்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை மோசடி செய்து இருக்கிறார்கள்.
சீனி இறக்குமதிக்கான வரி 50 ரூபாயாக இருந்ததுடன் அந்த வரி 2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் கடந்த பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையான கால பகுதியில் 25 சதமாக குறைக்கப்பட்டதன் மூலம் ஆயிரத்து 590 கோடி ரூபாய் மோசடி செய்து இருக்கிறார்கள்
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயில் 40% நச்சு இரசாயனங்கள் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றது
சிங்கராஜா உலக பாரம்பரிய வனப்பகுதியில் 5 ஹெக்டேயர் பரப்பளவில் இரண்டு நீர்த்தேக்கங்களை அமைக்க சீனா நிறுவனங்களுக்கு அனுமதி அளித்து இருக்கின்றார்கள்
இலங்கைக்கு சொந்தமான 8 லட்சம் ஏக்கர் வனப்பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனியாருக்கு விற்கும் செயல்திட்டம் ஒன்றை முன்வைத்து இருக்கிறார்கள்
2021 ஆம் ஆண்டு மட்டும் 5 பில்லியன் அமெரிக்கா டொலர் கடன் மற்றும் அதற்கான வட்டியை மீள செலுத்த வேண்டிய நிலைக்கு நாட்டை தள்ளி இருக்கின்றார்கள்
2020 ஆம் ஆண்டு மட்டும் ஏறத்தாழ 700 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்தை அச்சடித்து இருக்கின்றார்கள். வருமான இழப்பு மற்றும் சர்வதேச ரீதியாக கடன்களை பெற்று கொள்ளுவதில் ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி காரணமாக எந்தவித பொருளாதார திட்டமிடலுமின்றி பணத்தினை அச்சடித்து வருகின்றார்கள்
இந்த மாதம் மட்டும் சீனாவிடம் இருந்து 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான currency swap வகை கடன்களுக்கான ஒப்பந்ததை கைச்சாத்திட்டு இருக்கின்றார்கள்
தவறான நிதி மற்றும் வரி கொள்கை காரணமாக Standard and Poor Fitch and Moody , போன்ற முன்னணி சர்வதேச மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்துவதற்கான ஆற்றலை இழந்து வரும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்ய துணை நின்று இருக்கின்றார்கள்
தவறான நிதி முகாமைத்துவம் காரணமாக சர்வதேச ரீதியாக ரூபாவிற்கான பெறுமதி மோசமாக வீழ்ச்சியடைந்து ஒரு அமெரிக்கா டொலருக்கு நிகரான இலங்கை பெறுமதி 200 ரூபா என்கிற உச்ச நிலையை அடைய காரணமாக இருந்து இருக்கின்றார்கள்
Mount Lavinia beach சூழலில் எந்தவித ஆய்வும் இன்றி 889 மில்லியன் ரூபா செலவில் மண் நிரப்பி உருவாக்கப்பட்ட செயற்கையான beach மிக சில நாட்களில் முழுமையான கடலரிப்புக்கு உள்ளாகி அழிந்து போக காரணமாக இருக்கின்றார்கள்
அரிசி, சீனி, டின் மீன் , பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகளின் பிரகாரம் பொருட்களை வழங்குவதில் சதொச போன்ற நிறுவனங்களே தோல்வியடைந்தன . இதை தொடர்ந்து வெளியிடப்பட்ட சகல வர்த்தமானி அறிவித்தல்களும் மீள பெறப்பட்டன