ஜேர்மனியில் முடக்கநிலை மேலும் மூன்று வாரங்கள் நீடிப்பு
ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜேர்மனி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.ஜேர்மனியில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மார்ச் 28 ஆம் தேதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜேர்மனியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈஸ்டர் விடுமுறைகளில் 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் ஜேர்மன் அரசு அறிவித்துள்ளது.