November 23, 2024

11 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது

Overview of the Special Session of the Human Rights Council on "The situation of human rights in the Libyan Arab Jamahiriya" at the United Nations European headquarters in Geneva February 25, 2011. It is the first time a Council member will be the subject of a Special Session. The picture was taken through a glass window. REUTERS/Denis Balibouse (SWITZERLAND - Tags: POLITICS CRIME LAW)

இலங்கையில் அரசுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. ‚இது தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும்‘ என, ஐ.நா.,மனித உரிமை பேவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.கடந்த, 2012 – 2014 இல், அப்போது அதிபராக இருந்த, தற்போதைய பிரதமர், மகிந்த ராஜபக்சே ஆட்சியின்போது, ஐ.நா., மனித உரிமை பேரவையில் ,அந்த தீர்மானங்கள், இரண்டு முறை தோல்வி அடைந்தன. இந்த நிலையில் தற்போது ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் இலங்கை உள்நாட்டுப் போரில் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இலங்கை விசாரித்தாக வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளன.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தில் இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. இலங்கைக்கு ஆதரவாக  சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு எதிரான மேற்கூறிய தீர்மானம் ஐநா மனித உரிமை கவுன்சிலில் வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து  22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும்  வாக்களித்துள்ளன.  14 நாடுகள் நடுநிலைமை வகித்தள்ளன.