மன்னாரில் நீதிமன்ற கட்டடமும் போச்சு!
மன்னார் மாவட்ட நீதிமன்றக்கட்டிடத்தொகுதியை கையகப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளது தொல்லியல் திணைக்களம்.
தமது திணைக்கள ஆளுகைப் பிரதேசத்திற்குள் வருவதனால் அதனை அகற்றித் தருமாறு திணைக்களம் மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், சுற்றுலா அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள்,பொலிசார் அடங்கிய குழுவினர் கடந்த புதன் கிழமை மன்னார் பகுதியில் உள்ள கோட்டை மற்றும். அதனைச் சூழவுள்ள பகுதிகளை சுற்றுலா தளமாக மாற்றுவது தொடர்பில் ஆராய்ந்ததோடு அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆராய்ந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மன்னார் கோட்டை தொல்லியல் அடையாளமாகவுள்ளதால் அருகாகவுள்ள நீதிமன்றக் கட்டிடமும் அகற்றப்பட வேண்டும் எனக் கோரியுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிக இடங்களை உரிமை கோரும் தொல்லியல் திணைக்களம் அது தொடர்பில் தமது சட்டத்தை மீறியதாக நீதிமன்றங்களை நாடிய போதும் தற்போது முதல் தடவையாக வடக்கு, கிழக்கு மாகாணத்தில் ஓர் நீதிமன்றத்தினையும் தொல்லியல் திணைக்களம் உரிமை கோரியிருக்கின்றமை கவனத்தை ஈர்த்துள்ளது.