பிளவு அரசியல்வாதிகளின் விளையாட்டு!
நேற்றைய பசறை கோர விபத்து தொடர்பாக வைத்தியர் ஒருவரின் மனவுருக்கம் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது.
தனது பதிவில்
விடி காலை பொழுது… தொலை பேசியில் வைத்தியர் சமர பந்து.
மச்சோ.. பஸ் ஒன்று பிரண்டு ரொம்ப டேமேஜ்…..
வேகமா வாடா…
எனது அழைப்பு வைத்திய சாலையின் பணிப்பாளருக்கு
பஸ்ஸரயில் பஸ் விபத்து ஒன்று.. வேகமாக செல்ல வேண்டும்…
நான் வேகமாக அவசர சிகி்ச்சை பிரிவுக்கு சென்றேன்..
செனென் உபகரணங்கள்… அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர்..
சிந்தக, செனென் என்னோடு..
சச்சித் அனைத்து தகவல்களையும் வழங்கி கொண்டு இருந்தார்..
வைத்தியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களும் சுமார் 100 பேர் வரையில் தயார் நிலையில்..
நானும் சிந்துவும் அம்யூலன்ஸ் வண்டிகள் 5 முதல் 6 களில் நேரடியாக பஸ்ஸர பயணமானோம். ஓட்டுநர் மிகுந்த அவதானம் நிறைந்த பாதையில் பாதுகாப்பாக வேகமாக சென்றார்.
Pயளளயசய வைத்தியசாலை பரபரப்பாக காண பட்டது.. அனைவரும் வேலை… நாமும் வேலையை தொடங்கினோம். அங்கு கொண்டு வந்த பெரும்பாலான நபர்கள் சடலங்களாகவே காணப்பட்டனர்.
உதவிக்கு மேலும் சில வைத்திய தாதியர் குலாம் வருகை தந்தனர்.
இப்போது விபத்து நடந்த இடத்துக்கு செல்ல வேண்டிய நிலை..
மீண்டும் ஓட்டுநர் வேகம் நிறைந்த பயணத்தில்…
பாரிய ஒரு அழிவு…
250 – 300 அடி பாதாளம்…
கீழே இறங்குவது பாரிய ஆபத்து..
நான் ஒரு இருதய நோயாளி.. வலது முழங்கால் வலி..
ஆனாலும் செல்ல வேண்டிய கட்டாயம்.
25 முதல் 30 கிலோ பாரமான மருந்துகளை சுமந்து கொண்டு புத்திக என் பின்னால்…
400- 500 மனித சங்கிலி.. கைகளில் உடல்கள்.. நோயாளிகள் மேல் நோக்கி கொண்டு வர பட்டனர்.
கயிறு ஒன்றில் தொங்கிய படி, கைகளின் உதவியுடன் கீழே சென்றோம்.
மேலே இருந்து புரண்டு வந்த கற்கள் ஒருபுறம்.
நூலிழையில் தப்பினாலும் ஒருவரின் கால் உடைந்து போனது..
காப்பற்ற கூடிய அனைவரும் பாதுகாப்பாக மேலே கொண்டு வர பட்டனர்.
மிகுந்த சிரமத்துடன் நாமும் மேலே வந்தோம்.
மனித சங்கிலியில் தம்பி, தமிழன், சிங்களவன் ஒன்றாக..
தண்ணீர் தமிழனிடம் இருந்து…
பணிஸ் முஸ்லிமிடமிருந்து..
தேநீர் சிங்களவனிடமிருந்து…
எல்லோரும் ஒரே நோக்கம்த்தில்..
ஜாதி சமயம் அங்கே இருக்கவில்லை…
இந்த பிளவு அரசியல்வாதிகளின் விளையாட்டு…
அவர்களது அல்லக்கைகளினது…
அவர்களது நிலைத்திருத்தளுக்கு…
எப்படியானாலும் உண்மையான மனிதர்களை கண்டேன்.. உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் உங்களுக்கு
கடன் பட்டிருகின்றேன்…
என்று முடிகின்றது.