தடுப்பூசி பொட்டல் மட்டுமே நாட்டுக்குள் அனுமது!
கொரோனாவைத் தடுக்க தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலையை நோக்கி உலகம் சென்றுகொண்டிருக்கிறது. ரஷ்யாதான் முதன்முதலாக கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது. சில நாடுகள் ரஷ்யாவின் தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை பற்றி கேள்வி எழுப்பும் என்பதை அறிந்த அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின், ஸ்புட்னிக் V எனும் பெயரிட்ட அந்த தடுப்பூசியை தன் மகளுக்கே செலுத்தினார்.இதேபோல் சீனாவும் சினொவாக் பயோடெக் கம்பெனியின் மூலம் கொரோனா தடுப்பூசியை தயாரித்து பலகட்ட சோதனைளை செய்தது. பல தன்னார்வலர்களுக்குச் செலுத்தி அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்துவந்தது. இந்நிலையில் சீனாவால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டால் மட்டுமே அந்நாட்டுக்கு உள்நுழைய விசா வழங்கப்படும் என சீன அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது