November 25, 2024

இந்து ஆலய தொல்லியல் பொருட்கள் கொள்ளை!

ஆழியவளை சக்தி அம்மன் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான நகைககள், காசுகள்,இரத்தினகல் பொறிக்கப்பட்ட வெண்கல நாகசிலையும் கொள்ளையடிக்கப்பட்டதோடு அம்மனுடைய நகைகளும் திருடப்பட்டன.

யாழ்மாவட்டத்தின் வடமராட்சிகிழக்கு பிரதேசத்தின் ஆழியவளை கிராமத்தில் உள்ள வரலாற்று புதுமை வாய்ந்த சக்தி அம்மன் ஆலயத்தில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டதோடு அம்மனுடைய நகைகளும் திருடப்பட்டன.

அத்துடன் அண்மையில் ஆலயத்தில் புதிதாக நாகதம்பிரான் ஆலய கட்டுமானபணி மேற்கொள்ளும்போது  நிலத்தை ஆழமாக வெட்டும் போது 10அடி ஆழத்தில் மூதாதையர் காலத்தில் வழிபட்ட வெண்கலத்திலான இரத்தினகல் பதிக்கப்பட்ட நாகதம்பிரான் சிலையும் ,வெண்கல விளக்கும் களவாடப்பட்டுள்ளது.

இவ் வெண்கல நாகசிலை ஊடகங்களிலும்,சமூகவலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டது அத்துடன் பல துறைசார்ந்தவர்கள் நேரடியாக வந்து பார்வையிட்டு ஆய்வுசெய்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

அம்மன்சிலை பட்டால் மறைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள்,பணம் கொள்ளையடிக்கப்பட்டது பக்தர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதணிகளின் அடையாளம் கோயிலில்  காணப்படுகிறது. நன்கு திட்டமிட்டு களவு இடம்பெற்றிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கோயிலின் கதவுகள் உடைக்கப்பட்டு கோயில் பொருட்கள் அனைத்தும் கிண்டப்பட்டு அங்காங்கே சிதறிக் காணப்பட்டது.