November 25, 2024

தள்ளாடுகிறார் சுமந்திரன்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவிற்கா அல்லது சஜித்திற்கா ஆதரவளிப்பதென்பதில் குழம்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.ஆனாலும் தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அதற்கு விளக்கமளித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.

ஊடக கேள்வி:2024-25 ,ல் எதிர்பார்க்கப்படுகின்ற ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ச மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய ,ரு வேட்பாளர்களில் உங்கள் விருப்பு யாராக இருக்கும்?

பதில் : தற்போது அதனைக்கூற இயலாது.

கேள்வி: நிகழ்கால நிலமையின் அடிப்படையில் ?

பதில்: இந்த காலகட்டத்தில் எமது தெரிவு சஜித்தாகவே இருக்கும்.இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் ,ரு தரப்பினரோடும் பேச்சு வார்த்தை நடாத்தினோம்.அதன்போது சஜித் அவர்களே தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண இணங்கியதோடு தேர்தல் பிரகடணத்திலும் இவை தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கேள்வி: சஜித் பிரேமதாசவுக்கு நிகராக பசிலும் முற்போக்கு சிந்தனை உடையவராக காணப்படுகின்றார். அவ்வாறான சூழ்நிலையில் உங்கள் நிலைப்பாடு?

பதில்: எனக்கு அக்கருத்தோடு உடன்பாடில்லை, அவர் அமைச்சராக இருந்த கால கட்டத்திலேயே „திவி நெகும“ எனும் அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக பிரதேச சபையின் அதிகாரங்களை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்திருந்தார். எனவே அதிகாரப்பகிர்வு தொடர்பாக அவருக்கு  சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் காணவில்லை.

கேள்வி: உங்களுக்கு சஜித் பிரேமதாச அவர்கள் அதிகாரங்களை பகிர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

பதில்: அவர் அதிகார பகிர்விற்கு இணங்கியுள்ளார்.இருப்பினும் இது நிகழ்கால சூழ்நிலையே, 2024-5 இன் போது பசில் அவர்களும் அதிகார பகிர்விற்கு இணங்குவரானால், அவ்வாறே சிங்கள மக்கள் மத்தியிலும் இதனை பிரச்சார படுத்தினால்.

கேள்வி: சஜித் அவர்கள் மூலமாக அல்லாது பசிலின் மூலமாக இதனை அடைவது இலகுவல்லவா?

பதில்: அவர் இணங்குவாறாயின் அது இ,லகுவாக இருக்கும், இதனை நான் கோட்டாபய ,ராஜபக்ச அவர்களிடமும் தெரிவித்திருந்தேன். „நீங்கள் தீர்விற்காக முயற்சி செய்தால் தீர்வினை அடைய முடியும் என்றும் உங்களை சிங்கள மக்களுக்கு எதிராக தொழிற்படுவதாக யாரும் குற்றப்படுத்த மாட்டார்கள் என்று…“ அவரும் அதனை ஒத்துக்கொண்டார், ஆம் என்னால் முடியும் என்று ஏற்றுக்கொண்டாலும் அதனை செய்யவில்லை.

கேள்வி: ஏன் அவர் இதனை செய்யவில்லை?

பதில்: அவருக்கென்று சில கொள்கைகள் இருக்கின்றன, அதனடிப்படையில் அவர் இதனை செய்யவில்லை மாட்டார்.