März 28, 2025

மறியல் போராட்டத்தில் வடக்கு சுகாதார தொண்டர்கள்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து 8 வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார

தொண்டர்கள் இன்றையதினம் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதி மற்றும் ஆளுநர் செயலக நுழைவாயில்களை மறித்து போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இதனால் வீதிப் போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர் மயக்கமடைந்து விழுந்த நிலையில் உடனடியாக 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இதேநேரம் இன்று காலை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.